என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவ கல்லூரி"
தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 2900 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன.
இந்த ஆண்டு கரூரில் புதியதாக அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்குகிறது. கல்லூரிக்கான கட்டுமானங்கள் முடிவடைந்து தற்போது பணியாற்ற வேண்டிய டாக்டர்கள் நியமனம் நடந்து வருகிறது.
இந்த கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கும். இத்துடன் மதுரை, திருநெல்வேலி மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள இடங்களை விட கூடுதலாக 100 இடங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அது சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரி கூடுதல் இடங்கள் சேர்ந்து மொத்தம் 350 இடங்கள் அடுத்த கல்வியாண்டில் கூடுதலாக கிடைக்கும்.
அதன்படி 2019-20ம் கல்வி ஆண்டில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மருத்துவ கல்வித்துறை இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார்.
இதுசம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, கடந்த காலங்களில் மருத்துவ கல்லூரிகளை 100 இடங்களுடன் மட்டுமே ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள் பெறப்பட்டது. இனி புதிதாக தொடங்கப்படும் அனைத்து கல்லூரிகளிலும் 150 இடங்கள் இருக்கும் வகையில் தொடங்கப்படும் என்று கூறினார்.
அடுத்ததாக பெரம்பலூர், ஊட்டி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி இடங்களையும் 250 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், மத்திய மருத்துவ கவுன்சிலின் வழி காட்டுதலின்படி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் உயர் மருத்துவ படிப்புகள் தொடங்க இருப்பதாகவும், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலை போக்குவரத்து துறை சார்பில் மருத்துவ கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கல்லூரியை போக்குவரத்து துறை நடத்த முடியாத நிலை இருப்பதால் சுகாதாரத்துறையிடம் கல்லூரியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். அடுத்த கல்வி ஆண்டு முதல் அந்த கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #MBBS #TN
சென்னை உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவருடைய மகன் கவுதமன்(வயது 18). இவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். திருவாரூர் கூட்டுறவு நகரில் லோகநாதன் என்பவரது வீட்டின் மாடியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி படித்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி இரவு சென்னைக்கு சென்ற அவர் நேற்று காலை திருவாரூர் கூட்டுறவு நகரில் தான் தங்கி இருந்த வீட்டுக்கு வந்தார்.
கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கவுதமன், நீண்ட நேரமாக வெளியில் வராததால் வீட்டின் உரிமையாளர் லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு ஒரு அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் கவுதமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு லோகநாதன் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசாரும், மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் கண்ணன் மற்றும் மருத்துவ மாணவர்களும் விரைந்து வந்தனர். பின்னர் கவுதமனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவுதமனின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கவுதமனின் செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும் கவுதமன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று திறந்து வைத்தனர்.
இந்த திறப்பு விழாவின்போது உரையாற்றிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
அயோத்திக்கு யாராலும் அநீதி இழைக்க முடியாது. நமது பெருமை, கவுரவம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். #Ayodhyamedicalcollege #KingDasharatha #KingDasharathamedicalcollege #YogiAdityanath
இந்திய மாணவர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் விண்ணரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை காலப்பட்டில் இயங்கி வரும் பிம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகம் நடப்பு கல்வி ஆண்டில் கூடுதலாக 50 இடங்களை நிரப்பி கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிம்ஸ் மருத்துவக்கல்லூரி கூடுதலாக பெற்ற 50 இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டிய பொறுப்பு புதுவை அரசின் சென்டாக் நிர்வாகத்தினுடையது.
உயர்நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை சார்பில் இந்திய மருத்துவ கவுன்சில் கூடுதல் 50 இடங்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே, கூடுதல் 50 இடங்களுக்கு 1 :10 என்ற தன்மையில் மாணவர்களின் தகுதி பட்டியல் வழங்க தேவை எழவில்லை என மாநில அரசு தன்பொறுப்பை தட்டிக்கழித்து கொண்டது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் 50 இடங்களையும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பி கொண்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் மாணவர் சேர்க்கையில் தவறு இருக்குமானால் முறையான மாணவர் சேர்க்கையை 7 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
புதுவை மாணவர்களுக்கு 17 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டார்கள். ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த மாணவர்கள் தங்கள் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுமோ என்று அஞ்சினார்கள். இவ்வாறு ஒரு குழப்பமான சூழல் அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் மிகப்பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டு உள்ள அப்பாவி மாணவர்களின் உயர்கல்வி தொடர மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். #tamilnews
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகளும் 13 தனியார் மருத்துவ கல்லூரிகளும், 10 நிகர்நிலை பல்கலைக் கழகங்களும் உள்ளன. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் 2750 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இதற்கிடையே தனியார் மருத்துவ கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு இல்லாததால் அதன் உரிமத்தை நீட்டிக்க அகில இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது.
2017-ம் ஆண்டு மூன்று கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தது. இதனால் மருத்துவ படிப்பு இடங்கள் குறைந்தது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். இடங்கள் உயர்கிறது. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க தனியார் கல்வி நிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளன. இதே போல் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த தனியார் கல்லூரிகளும் தற்போது உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளன.
கரூரில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. இதில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் இடம் பெறுகிறது. இதே போல் நெல்லை மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரிகளில் தற்போது தலா 150 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை 250-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மதுரையில் சி.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மற்றும் கோவை மருத்துவ கல்லூரிக்கு தடை இல்லா சான்றிதழ்களை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. மேலும் தனியார் கல்வி நிறுவனங்களும் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளன.
இதைதொடர்ந்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாட்டில் கல்லூரி தொடங்க விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களிலும், மாணவர் சேர்க்கை தடைவிதிக்கப்பட்டு தற்போது மீண்டும் விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கும். தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால் 1200 இடங்கள் வரை கிடைக்கும்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதலாக 1550 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட 189 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமீரா பாத்திமா உள்ளிட்ட மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சிவபாலன், கல்லூரி தரப்பில் வக்கீல் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதி யு.யு.லலித் விடுப்பில் இருந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்பை வாசித்தார்.
தீர்ப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை தன்னிச்சையாக முடிவு செய்ய அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் கிடையாது. கல்லூரி நிர்வாகம் 2 வாரத்தில் அனைத்து கணக்கு வழக்குகள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த குழு ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முடிவு செய்ய வேண்டும். அதே தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும். ஏற்கனவே கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டு இருந்தால் 2013-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு கூடுதலாக பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு நடப்பு ஆண்டுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SupremeCourt #AnnamalaiUniversity #tamilnews
சென்னை:
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது.
அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 20 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அவர்களில் 7 பேர் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். 13 பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றவர்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 2,447 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நடந்து முடிந்த முதல்கட்ட கலந்தாய்வில் அரசு பள்ளிகளில் படித்த 3 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மற்ற 4 மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு (கோட்டா) மூலம் இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் பயில மாணவர்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.13,500 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் இடம் பெற்றுள்ளவர்கள் ஆண்டுக்கு தலா ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு வரை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு (2017) முதல் மத்திய அரசின் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு ஒதுக்கீடு நடைபெறுகிறது.
‘நீட்’ தேர்வுக்கு கடுமையான பயிற்சி மற்றும் கூடுதல் பணச் செலவு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் போன்றவை காரணமாக தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகிவிட்டது.
எனவே தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான விசேஷ பயிற்சி அளித்தது. அதற்காக பல கோடி ரூபாயை செலவு செய்தது.
இதை தொடர்ந்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெற்ற பள்ளிகளை சேர்ந்த 9,154 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். அதில் 1,344 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 10 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். 42 பேர் 200-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அரசு உதவி பெறும் பழைய வண்ணாரப்பேட்டை சங்கரலிங்க நாடார் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜெ.சரண் அதிக பட்சமாக 416 மதிப்பெண் பெற்றார். இதனால் இவருக்கு வேலூர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
நீட் தேர்வு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 30 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு நீட் தேர்வு அறிமுகமான போது 5 பேர் மட்டுமே இடம் பெற முடிந்தது. இந்த ஆண்டு 7 மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது.
அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து பயில வேண்டும் என்ற பேரார்வத்துடன் உள்ளனர். ஆனால் அவர்களால் நீட் தேர்வுக்காக கடும் பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை.
ஏனெனில் அவர்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, அதிக அளவிலான அரசு பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேரும் வகையில் அதிக மதிப்பெண் பெற நீட் தேர்வு பயிற்சியை மாற்றியமைக்க தமிழக அரசின் பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது. #Neetexam
சென்னை:
நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கான வினாத்தாளில் குளறுபடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 49 வினாக்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்கவும், 2 வாரத்தில் புதிய தர வரிசை பட்டியல் தயாரித்து வெளியிடவும் மதுரை கோர்ட்டு இன்று அதிரடியாக உத்தரவிட்டது.
கோர்ட்டின் இந்தஅதிரடி உத்தரவு மருத்துவ மாணவர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே தர வரிசை பட்டியல் வெளியிட்டு கவுன்சிலிங் நடத்தி தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துவிட்டது.
சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்களை பெற்று சேர்ந்து விட்டனர். கல்லூரிகள் திறக்கும் நாளை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பு முட்டுக்கட்டை போட்டுள்ளது. 196 மதிப்பெண் வழங்கி புதிதாக தரவரிசை பட்டியல் தயாரித்தால் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் சிலரது வாய்ப்பு பறிபோகும். புதிதாக சில மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக இடம் கிடைத்தும் வாய்ப்பை இழக்கும் நிலைக்கும் சில மாணவர்கள் தள்ளப்படுவார்கள். அவர்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி கோர்ட்டில் நியாயம் கேட்பார்கள்.
சிக்கலை தவிர்க்க கூடுதலாக இடங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்குவதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் இடம் கொடுக்க வேண்டும்.
ஒருவேளை இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக கூடுதல் இடங்களை உருவாக்கி விட்டு அடுத்த ஆண்டு அதை ரத்து செய்தால் சிக்கல் எழும்.
சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்து தடை பெறலாம். அப்படி தடை பெற்றாலும் இறுதி தீர்ப்பு வரும்வரை கல்லூரிகளை திறக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நீட் தேர்வு நடந்ததும் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்போதே அதுபற்றி ஆய்வு செய்து ஏதாவது மாற்று ஏற்பாடுகளை செய்து பிரச்சினையை தீர்த்து இருக்க வேண்டும். அதை செய்ய சி.பி.எஸ்.இ. தவறி விட்டது.
சி.பி.எஸ்.இ. செய்த குளறுபடியால் மிகப்பெரிய சிக்கலுக்குள் சிக்கி தவிப்பது தமிழக மாணவர்கள்தான். மகிழ்ச்சியுடன் கலந்தாய்வுக்கு சென்று இடமும் கிடைத்து கல்லூரிக்கு புறப்பட தயாராக இருந்த மாணவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். #Neetexam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்